எளிமையான ரசம்

  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 100 கிராம் தக்காளி
  • 500 மில்லி லிட்டர் தண்ணீர்
  • 25 கிராம் புளி
  • ரசப்பொடி தயாரிக்க
  • 10 கிராம் மிளகு
  • 10 கிராம் சீரகம்
  • 10 கிராம் மல்லி விதை
  • 3 கிராம் காய்ந்த மிளகாய்
  • தாளிக்க:
  • 30 மில்லி லிட்டர் எண்ணெய்
  • 3 கிராம் கடுகு
  • 2 கிராம் கறிவேப்பிலை
  • 3 பூண்டு
  • 10 கிராம் கொத்தமல்லி இலை
  • உப்பு
  • பூண்டு மற்றும் தக்காளியை நசுக்கி கொள்ளவும்.
  • புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
  • அரைக்க தேவையானவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • பருப்பு மற்றும் தக்காளி இரண்டையும் சேர்த்து நன்கு வேக விடவும்.
  • அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • மேலும் அத்துடன் பூண்டு, கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும்.
  • இப்போது பருப்பு வெந்தபின் அதில் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • அத்துடன் புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடியை சேர்த்து கொள்ளவும்.
  • மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி பரிமாறலாம்.
Design a site like this with WordPress.com
தொடங்கவும்