ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ வடை ரெசிபி! சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பூ வடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
- வாழைப்பூ -1
- பொட்டுகடலை -100 கிராம் (மிக்ஸ்சியில் பவுடர் போல் அரைத்து கொள்ளவும்)
- உப்பு -தேவையான அளவு
- எண்ணெய்-தேவையான அளவு
- சோம்பு தூள்-1 டீஸ்பூன்
- இஞ்சி,பூண்டு விழுது-2 டீஸ்பூன்
- முதலில் வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.வாழைப்பூ ஆறிய பின்பு மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.
- அரைத்து வைத்த வாழைப்பூவுடன்,பொட்டுகடலை பவுடர் ,சோம்பு தூள்,இஞ்சி,பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டாம் .
- பிசைந்து வைத்த வாழைப்பூ மாவை சிறு உருண்டைகளாக உருட்டியோ அல்லது வடையாக தட்டி கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்த வாழைப்பூ வடையை பொரித்து எடுத்தால் வாழைப்பூ வடை ரெடி.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு — 9. விருந்தோம்பல்/ குறள் 81:
